
நம் சந்ததிகளுக்கு பாதுகாப்பான பூமியை பரிசளிப்போம்
இன்று ஏப்ரல்-22 உலக புவி நாள் -நாம் வாழும் இந்தபூமியை பாதுகாக்கும் பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் பூமியை நாசமாக்குகின்றன. மனித குலத்தையே அழித்துவிடும் அளவிற்கு நிலைமை சென்று தீவிரம்அடைந்துவருகிறது.
. 1969-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே மனிதர்கள் வாழ தகுதி யற்றதாக மாறிபோனது.இதனை எதிர்த்து 1970-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, 2 கோடி பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்கள். மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள் என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது. `கேலார்டு நெல்சன்’ என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர். அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள்.
1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். 3மாதங்களில் பெய்யவேண்டிய மழை 1 வாரத்தில் பெய்கிறது. கோடை கால வெயில் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒருகுறிபிட்டகருபொருளை மையமாககொண்டுபுவிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதாவது
2022 ஆம் ஆண்டின் புவி தினத்தின் கருப்பொருள் நமது கோளில் நீடித்து உறுதியாக்க முதலீடு செய்யுங்கள் என்பதாகும். இந்த ஆண்டின் கருப்பொருள் வளமான மற்றும் சமமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவது. ஒன்றிணைந்து செயல்படுவதையும், நமது ஆரோக்கியம், நமது குடும்பங்கள், நமது வாழ்வாதாரம் மற்றும் நமது பூமி ஆகியவற்றை பாதுகாப்பது.இந்த நோக்கத்திற்காக நாம் கோளில் நீடித்து உறுதியாக்க முதலீடு செய்ய வேண்டும், ஏனென்றால் பசுமையான எதிர்காலம் ஒரு வளமான எதிர்காலம்.பிளாஸ்டிக் பயன்பாட்டைகுறைப்பதும்.மரங்களை வளர்ப்பதுமே நம்பூமியை பாதுகாக்கும் வழி.
இன்று பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம், ஆனால் கண்டுபிடிப்புகள் எப்போது வேண்டுமானாலும் அழிவைத் தரலாம்.
இந்தப் பூமியைக் காப்பாற்றும் நடவடிக்கையும் தனி நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். நாம் மாறினால், நாடு மாறும். நாடுகள் மாறினால், பூமி வாழும்’ என்பதைத்தான் இந்தபுவி நாள் நமக்கு கற்றுத்தருகிறது.
இந்த நாளில், நாம் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் உறுதிமொழியை ஏற்போம். பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டோம், முடிந்தவரை தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம், காற்று மாசுபடும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் செய்ய மாட்டோம் என ஏதாவது ஓர் உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
இந்த பூமியை பாதுகாத்து நம் சந்ததிகளுக்கு அளிக்கவேண்டியது நம் கடமை.
