• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

SPDI தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி….

BySeenu

Aug 18, 2026

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கோவையில் மூலப்பொருள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும், சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம் ஜிஎஸ்டி சீரமைப்பு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், கோவை மற்றும் திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரிய கிளை பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூக நீதி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், FCRA சட்ட திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த SPDI தேசிய தலைவர் ஃபைஜி,பாஜகவிற்கு எதிராக போராட்டம் நடத்தவும் SDPI கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டிய அவர் பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்றும் ஒரு Failure அரசாக பாஜக அரசு உள்ளது என விமர்சித்தார்.

மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி தான் மீண்டும் மீண்டும் பாஜகவினர் ஆட்சிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இதனை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றும் கூறிய அவர் ஆனால் இதனை எல்லாம் செய்ய வேண்டிய பாரம்பரியமான கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை செய்யவில்லை மக்களிடம் சொல்லவில்லை மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவும் அளிக்கவில்லை என்றார்.

பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டிய பொறுப்பு SDPI க்கு உள்ளது என்று கூறிய அவர் பாஜக ஒரு மதத்தை எதிராக காட்டி ஆனந்தம் அடைகிறார்கள் என்றும் வந்தே மாதரம், வக்ஃபு சட்டம் இரண்டும் ஒரு சமூக மக்களை கொச்சைப்படுத்தும் உள்ளது என்றார். FCRA சட்டம் சேவை அமைப்புகளை முடக்கும் விதமாக உள்ளதாகவும் அது மிகவும் ஆபத்தானது என எடுத்து கூறி வருவதாகவும் எந்த ஒரு திருத்தமும் அதில் கொண்டு வரக்கூடாது என தெரிவித்தார்.

நீட் தேர்வு க்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும்ஆனால் CJP உடன் சேர்ந்து SDPI இல்லை என்றார். தேர்தல் நேரங்களில் பாஜகவிற்கு எதிர் என்றால் காங்கிரஸ் கட்சியை தான் குறிப்பிடுவார்கள் என்றும் ஆனால் தற்போது அப்படி இல்லை மக்களே பொது வெளிக்கு வந்துள்ளார்கள் என CJP யை சுட்டிக்காட்டினார். மேலும் 3 வருடத்தில் பாஜக All out ஆகிவிடுவார்கள் என்றும் CJP யை ஆதரிக்க கோடிக்கணக்கான மக்கள் வந்தார்கள் என்றார்.

மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், நீட் கொண்டு வந்த காலத்தில் இருந்தே அதற்கு விலக்கு வேண்டும் என்று கூறிய மாநிலம் தமிழகம் என்றார். சிறைவாசிகள் விடுதலை கடந்த ஆட்சியில் கொஞ்சம் நடந்தது இந்த அரசு பொது மன்னிப்பின் பேரில் அனைவரையும் வெளிவிட வேண்டும். காலவரையற்ற நீண்ட பரோலை கொடுக்க வேண்டும் என்றார்.

தவெக அரசு 100 நாள் ஆட்சி குறித்தான கேள்விக்கு நல்லதை பாராட்டுகிறோம் தவறுகளை சுட்டி காட்டுகிறோம் என்று பதில் அளித்தார்.