இது, விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.
சொறி, சிரங்கு மற்றும் ரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்குவதுடன் முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.
கொய்யாப்பழம்
