தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து சிவகாசி மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி மாநகராட்சிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வன மூர்த்தி லிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் கடந்த மூன்று நாட்களாக வீணாகி செல்கின்றன.

ஏற்கனவே கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்து வரும் நிலையில் தற்போது தண்ணீர் வீணாகி வருவதால் சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் சப்ளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் வீணாகி செல்லும் குடிநீரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





