• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,

ByP.Thangapandi

Aug 18, 2026

தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் அமைந்துள்ளது நுகர் பொருள் வாணிப கிடங்கில் மதுரை மாவட்ட பொருலாளர் ஜெயக்கொடி தலைமையிலான சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

மேலும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் தோல்விகளே ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தவெக அரசும் 10 நாள் என தொடர்ந்து கால தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வை அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.,