மாம்பழம்:
தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் எனவும், குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு இதன் பலன் அதிகம் எனவும் சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது, மாம்பழத்தில் உள்ள மங்கிபிரின் என்ற ஆண்டிஅக்சிடண்ட் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை சரிசெய்கிறது. மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது குளுகோஸ் ரத்தத்தால் கிரகிக்கப்படுவதை குறைக்கிறது என்பதை அமெரிக்காவில் ஒக்ளஹாமா மாகான யுனிவர்சிடியில் பணிபுரியும் நியுட்ரிசநிஸ்ட் எட்ரலின் லூகாஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு சுமார் 12 வாரங்கள் 11 ஆண்கள் மற்றும் 9 பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் மாம்பழம் உட்கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என லூகாஸ் தெரிவித்துள்ளார். உடல் பருத்தவர்களுக்கு நல்ல பயனளிக்கும். ஆனால் அவர்கள் உடல் எடை குறையவோ கூடவோ வாய்ப்பில்லையாம்..