• Sun. Feb 9th, 2025

சீமான் வீடு ஜனவரி 22-ம் தேதி முற்றுகையிடப்படும்… திருமுருகன் காந்தி அறிவிப்பு!

ByIyamadurai

Jan 15, 2025

பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 22- ம் தேதி முற்றுகையிடும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காவல் நிலையங்களில் 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 22-ம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இதில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.