• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சித்தர் பீடத்தில் அன்னதானம் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஒடைக்கரையில் பதிணென் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்தர் முறைப்படி யாகமும் பதினெட்டாம்படி கருப்புசாமி பீடம் மற்றும் பதிணென் சித்தர் பீடத்திற்கு மகா சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

இந்த யாகசாலை சிறப்பு பூஜையினை சித்தர் பீட அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் விஜயபாஸ்கர், பட்டர் சுப்பிரமணி ஆகியோர் செய்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பஞ்சவர்ணம் ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் மாமல்லன் கார்த்திக் வரவேற்றார்.

இந்த அன்னதானத்தை அறக்கட்டளை தலைவர் விவசாய விஞ்ஞானி சி. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.இதில் சித்தா, வர்மா, அக்குபஞ்சர் மருத்துவர்டாக்டர் லிங்க செல்வி தலைமையில் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். முடிவில் அறக்கட்டளைஉறுப்பினர் பொன்ராம் நன்றி கூறினார்.