• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக் கரையில் எழுந்தருளியுள்ள மீனா ட்சி சுந்தரேசுவர் திருக்கோவி ல் சித்திரை திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினந்தோறும் மாலை 6மணிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அம்மன் அருள் பாலித்தார். 28ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:25 மணிக்கு மீனாட்சி அம்மனு க்கு திருக்கல்யாணம் நடந்தது. 29ந்தேதி மாலை 6:00 மணிக்கு கோவில் முன்பாக தேர் பவனி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி தொடக்கி வைத் தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இந்தத் தேர் பவணியில் வண்ண வண்ண மலர்கள், வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள் பட்டு உடுத்தி சுந்த சுந்தரேஸ்வரரும், அரக்கு பார்டரில் பச்சை பட்டு உடுத்தி முத்தங்கி ஆடை அணிந்து மீனாட்சி அம்மனும் அருள் பாலித்தனர்.

இந்த தேர் பவனி குலசேகரன் கோட்டையில் தொடங்கி வி.எஸ். நகர், ராமநாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி, பஸ் நிலையம், தாதம்பட்டி,மேட்டு பெருமாள் நகர், நீரேத்தான் யூனியன் ஆபீஸ் ரோடு,மீனாட்சி நகர், போலீஸ் ஸ்டேஷன், லாலா பஜார், சந்தை பாலம், பேரூராட்சி அலுவலகம், கள்ளர் மடம், குலசேகரன்கோட்டை பிரிவு வழியாக அதிகாலை 3 மணிக்கு கோயிலை சென்றடைந்தது.

இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீடுகளில் முன்பாக வழிபாட்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் குலசேகரன் கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.