• Sat. Apr 26th, 2025

வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்… நடிகர் அஜித் குமாருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்தது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.