• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆட்டை திருடிச் சென்றதால் கதறி அழுத மூதாட்டி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த மூதாட்டி நாகம்மாள் (வயது 65). இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.

நாகம்மாள் ஒரு வெள்ளாடுடன் இரண்டு குட்டி ஆடுகளை வளர்த்து அதை சேர்த்துக்கொண்டு விவசாய கூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு வீட்டு முன்பு ஆடு மற்றும் குட்டிகளை கட்டி வைத்துவிட்டு நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆடு மற்றும் குட்டிகள் கத்தும் சத்தத்தை கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த நாகம்மாள் பார்த்தபோது
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் வீட்டு முன்பு கட்டி வைத்து இருந்த ஆட்டை மட்டும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.

மூதாட்டி நாகம்மாள் அய்யோ அம்மா ஆட்டை தூக்கிட்டு போறாங்களே என்று அலறி சத்தம் போட்டார். ஆனால் மர்மஆசாமிகள் அதற்குள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி சென்று விட்டனர்.

திருடு போன ஆட்டின் மதிப்பு ரூ 9 ஆயிரம் ஆகும்.

அதிர்ச்சி அடைந்த மூதாட்டி நாகம்மாள் தனது ஆடு திருடு போனது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆட்டை வைத்துத்தான் நான் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தேன். அந்த ஆட்டை தூக்கி சென்று விட்டார்களே ஐயா கண்டுபிடித்துக் கொடுங்க என்று கண்ணீர்விட்டு கதறி அழுது புகார் செய்தார்.

போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு ஆறுதல் கூறி மூதாட்டியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.