• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாக்கு எண்ணும் பணிக்கு வந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி..,

ByKalamegam Viswanathan

Apr 30, 2026

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை எண்ணும் மையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேர பாதுகாப்பு பணிக்காக திலகர் திடல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகன் (வயது 54) இருசக்கர வாகனத்தில் தியாகராஜா பொறியியல் கல்லூரி நுழைவு வாயில் கேட்டில் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா மற்றும் போலீசார் விசாரணை செய்து இறந்த சிறப்பு காவல் சார்பாக ஆய்வாளர் பாலமுருகனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்ததில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.