சேலத்தில் அழகிரி நாத சுவாமி திருக்கோவிலில் பெருமாளின் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுச்சென்றனர்.
சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் திருமகள் மணமகள் உடனுறை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண மஹோத்ஷவம் நடைபெற்றது. இதனை ஒட்டி திருமண நிகழ்ச்சி அரங்கேற்றம் விதமாக ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவன கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று நவக்கலச திருமஞ்சன நீரோட்ட சேவை விசேஷ அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று திருமாங்கல் சுப முகூர்த்தத்தில் பெருமாளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆச்சாரியார் தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 24 ஆம் ஆண்டு திருக்கல்யாண மகோத்ஷவம் வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர். மேலும் ஸ்ரீ பூமி தேவி நீலா சமேத சுந்தரராஜ பெருமாள் சிலை அலங்காரத்தில் திரு வீதி உலா நடைபெற இருக்கிறது.