• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,

ByKalamegam Viswanathan

Aug 9, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார்.

இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அண்டா பானை உள்ளிட்ட பரிசு பொருட்களும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் தியாகராஜன் தாமு மதுரை மேற்கு சரவணன் மற்றும் வாடிப்பட்டி பேரூர் சோழவந்தான் பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.