• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

என்னுடைய கான்ஃபிடன்ட் எனக்கு தெரியும் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்…. அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு..,

ByS. SRIDHAR

Aug 9, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்களை பரிசோதி செய்யப்பட்டனர் என்ற கண் சிகிச்சை முகாமில் துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தனர்

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் விராலிமலை மேற்கு தொகுதி மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேசுகையில்…

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த மண்ணிற்கு காவிரி குண்டாறு திட்டத்திற்காக தமிழக வெற்றிக்கழக அரசு தற்போது 150 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது வருங்காலத்தில் காவிரி குண்டாறு திட்டத்திற்காக அதிக நிதியை பெற்று தருவேன் என கூறிய அமைச்சருக்கு விராலிமலை தொகுதி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் தொடர்ந்து இதுபோல் நமது பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் விராலிமலை தொகுதி மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜயபாஸ்கர் பேசினார்…

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் பேசுகையில்…

என்னுடன் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அருமை மாமா முன்னாள் அமைச்சர் அவர்களுக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் விராலிமலை என்றாலே விசேஷம் தான் அடிக்கடி விராலிமலைக்கு நான் வருவேன் தொடர்ந்து 15 வருடமாக விராலிமலைக்கு வந்து கொண்டிருக்கிறேன் விராலிமலை தொகுதியை பொருத்தவரை எப்போதுமே மகிழ்ச்சி இருக்கும் சிறப்பான வரவேற்பு இருக்கும்.

எப்போதுமே எழுச்சியாக இருக்கும் இந்த விராலிமலை தொகுதி விராலிமலை தொகுதியில் நான் எப்பொழுதும் காரில் சென்றால் ஒரு மகிழ்ச்சியோடு தான் செல்வேன் அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குவதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்மளோட இணைந்து அந்த பெருமையை கொள்வதற்கும் கட்சியோட வளர்ச்சி ஏற்றுக் கொள்வதற்கும் வந்திருக்கிறார். மனப்பூர்வமாக மிகுந்த சந்தோஷமாக என்னுடைய தொகுதியான விராலி மலை தொகுதியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காக நான் விட்டுக் கொடுக்கின்றேன் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எந்த ஒரு அச்சமும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் என்னுடைய தலைமை என்னிடம் கேட்டார்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு என்ன பண்ணலாம் என்று என்னுடைய தொகுதி அவருடைய தொகுதி நமக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த தயக்கமும் இல்லாமல் எந்த அச்சமும் இல்லாமல் எந்த சங்கடமும் இல்லாமல் என்னுடைய தொகுதியை அவருக்கு கொடுங்கள் என்று கூறி முதலில் கையெழுத்து போட்டது நான்தான் மீடியாவில் எங்களையெல்லாம் சித்தரித்து போடாதீர்கள்.

என்னுடைய கான்ஃபிடன்ட் எனக்கு தெரியும் அத நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். நாங்கள் அனைவரும் வெவ்வேறு கருத்துக்களை ஒத்து இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் வந்து ஒரே கருத்தோடு தற்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எதிர்வரும் இடைத்தேர்தலில் தளபதி ஒருவரை வேட்பாளராக அறிவிப்பார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நம்முடைய நிர்வாகிகள் எல்லாம் இப்பவே ஒரு அன்பான வேண்டுகோள் உள்ளாட்சித் தேர்தலாக இருக்கட்டும் நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து புதிதாக வந்தவர்களை இணைத்து நாம் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் பரபரப்பு பேச்சு.