



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் பொறுப்பு நகர் மன்ற தலைவர் தேன்மொழி, ஆணையாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

நகர் மன்ற தலைவர் சகுந்தலா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் அவரது அறையை சீல் வைத்து பூட்டியுள்ள சூழலில் நகர் மன்ற தலைவர் நீக்கம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற முதல் கூட்டமாக இக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் நடைபெற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனக்கு முறையான அழைப்பானை மற்றும் துணைத் தலைவரை மதிப்பதில்லை என குரல் கொடுத்த துணை தலைவர் தேன்மோழி இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பு நகர் மன்ற தலைவராக தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் வார்டுகளுக்குள் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய நிதி ஒதுக்காமல், அலுவலக பயன்பாட்டிற்கு அதிகப்படியாக நிதியை ஆணையாளர் ஒதுக்கியுள்ளதாக நகர் மன்ற உறுப்பினர்கள் சரி மாறி குற்றம் சாட்டி வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நகராட்சி பகுதியில் உள்ள பிரச்சனைகளில் வருவாய்த்துறை தலையீடாத சூழலில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பட்டாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் நகர் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் எனவும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

