கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு மதுரை மாநகர்
டிவிஎஸ் நகர் லட்சுமி சாலையில் உள்ள பெயிண்ட் நிறுவன விநியோகஸ்தரான ஒருவர் ஆண்டுதோறும் பக்தர்களுக்கு பல்வேறு பிரசாதங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய பின்னர் பக்தர்களுக்கு சில்வர் தட்டு, இனிப்பு வகைகள் மற்றும் சிறுவர்களுக்கான வாட்ச் உள்ளிட்டவை வழங்க உள்ளதாக தெரிவித்திருந்ததார்.
இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெண்கள் அப்பகுதியில் கூடினர். சில்வர் தட்டு இனிப்புகள் வாட்ச் உள்ளிட்ட பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த போது தொடர்ந்து கூட்டம் அதிகரித்த நிலையில் திடிரென அங்கு வந்த காவல் துறையினர் அனுமதி இன்றி கூட்டம் கூடக்கூடாது என கூறி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

காலை முதலாக பிரசாதம் வாங்குவதற்காக காத்திருந்த பெண்கள் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பிரசாதம் வழங்கப்பட்டபோது ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்ததால் நிகழ்ச்சி பாதையிலே ரத்து செய்யப்பட்டது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.




