• Mon. Apr 28th, 2025

ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..,

ByKalamegam Viswanathan

Apr 16, 2025

ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் – 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை – 5 நாட்களாகியும் கடத்தப்பட்ட நபர் மீட்க முடியாத நிலையில் 8 தனிப்படை காவல் துறை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்திவரும் சுந்தர் என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தல்லாகுளம் பகுதியில் சிலர் கடத்திசென்றதாக வந்த புகாரில் சுந்தரை மீட்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.

5நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் குடும்பத்தினர் அச்சம் பணத்திற்காக கடத்தப்பட்டாரா? வேறு எதுவும் காரணம் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடத்தப்பட்ட சுந்தர் மதுரையில் உள்ள பிரபல மில் நிறுவனமான மீனாட்சி மில் உரிமையாளரின் மகன் ஆவார்.

ஆட்சியர் அலுவலகம் தொடங்கி காவல் ஆணையர் அலுவலகம் வரை உள்ள முக்கிய பகுதியான மதுரை தல்லாகுளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஆட் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது காவல்துறையினருக்கு சவாலை உருவாக்கிவருகிறது.