லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது இதற்கு எதிராக வாக்களித்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கிண்டி கூட்டணி கட்சிகளை கண்டித்து காரைக்கால் மாவட்டத்தில் தொகுதி வாரியாக பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிரவி திருப்பட்டினம் தொகுதியில் தொகுதியின் பாஜக வேட்பாளர் டி கே எஸ் எம் மீனாட்சி சுந்தரம் தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. திருப்பட்டினம் கட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி திருப்பட்டினம் கடைத்தெருவில் நிறைவடைந்தது.

இந்த கண்டன பேரணியில் மாவட்ட தலைவர் முருகதாஸ், மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, தொகுதி தலைவர் பாலமுருகன், பட்டியலனி மாநில துணைத் தலைவி மணியம்மை, பாலாஜி, சித்திரைச் செல்வன், குமரவேல், மனோசதீஷ் மற்றும் மாவட்ட தொகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மகளிர் அணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் பேரணியில் ஏராளமான பாஜகவினர் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.




