• Mon. Jan 20th, 2025

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட நிர்வாகம்- பெண் புகார்

Byvignesh.P

May 31, 2022

தேனி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம். குறிஞ்சி நகரைச் சேர்ந்த பெண் புகார்
தேனியில் குறிஞ்சி நகர்பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஜான் என்பவரை கலப்பு திருமணம் செய்துகொண்டார் .இந்நிலையில் இருவரது வீட்டிலும் சேர்க்காத காரணத்தினால் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது குடும்ப வறுமை காரணமாக மகேஸ்வரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வேண்டி சந்தித்து பலமுறை மனுவை அளித்துள்ளார் .ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் வேதனை அடைந்த மகேஸ்வரி இன்றும் மீண்டும் மனுவை அளித்துள்ளார் .