• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற வைத்தியநாதன்..,

BySubeshchandrabose

May 31, 2026

தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்து வந்த வைத்திநாதன் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தேனி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று கொண்டார்

தேனி மாவட்டத்தின் 20 வது ஆட்சியராக பதவி ஏற்ற வைத்தியநாதனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்

தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கிய மாவட்ட ஆட்சியரை அரசு அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.