• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர் கைப்பந்து கல்விக்கழகம் நிறுவனர் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jun 3, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் மைதானத்தில் பேனியன் பவுண்டேஷன் சார்பில் 17 வயதுக்குடோருக்கான மூன்றாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், என தென் மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கைப்பந்து கல்விக் கழக நிறுவனர் அன்பரசன் பேசும்போது:

பேனியன் பவுண்டேஷன் (Banian Foundation) 2017-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் இது சம்பந்தமான சேவைகள் செய்து வருகிறோம். ஸ்கில் டெவலப்மென்ட் புரோகிராம்ஸ் என்விரான்மென்ட் ரிலேட்டடா,ஹெல்த் அண்ட் சேனிட்டேஷன் புரோகிராம்ஸ்லாம் (Health and sanitation programs) பண்ணிக்கிட்டு இருக்கோம்.

தமிழ்நாட்டுல வந்து போதை கலாச்சாரம் பரவி இருக்கு. சிஎம் (CM) சார்ல இருந்து எல்லா தலைவர்கள் வருத்தப்படறாங்க.
அதற்காக ஒரு சொல்யூஷன் போல் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘மதர் குளோப் ரெவொலூஷனரி ஹேண்ட்பால் அகாடமி’ (Mother Globe Revolutionary Handball Academy).

இதன் மூலம் வருட வருடம் மாநில அளவில் மாணவர்களை அழைத்து வந்து அவங்களுக்கு வந்து சரியான பயிற்றுனர் மூலமா,போதைப்பொருள் தடுப்பு பயிற்சிகளை அளித்து,பின்னர் ஒரு விளையாட்டு போட்டியா நடத்தணும் என்று (UNO) வந்து சொல்லி இருக்காங்க Sports வந்து போதைப்பொருளுக்கு மாற்று எனவே பல பயிற்சியாளர்களை ஒன்று சேர்த்து இந்த விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தி வருகிறோம். அகடாமி தொடங்கி அஞ்சு வருஷம் ஆகிவிட்டது கைப்பந்து விளையாட்டு மூலம் மாணவர்கள் மாநில அளவிலயும், நல்ல கல்லூரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டால படிச்சுக்கிட்டு இருக்காங்க.

மாணவர்கள் விளையாடுறது நல்லா பண்றாங்க அப்படின்னா, அவங்களால படிப்பும் நல்லா பண்ண முடியும். இளைஞர்களுக்கு மூளை சிறப்பாக வேலை செய்யும் படிக்கணும்னு எண்ணம் வச்சா கண்டிப்பா நல்ல மார்க்கும் எடுப்பாங்க. நாங்க இந்த அகாடமி மூலமா அதை நிரூபித்துள்ளோம். எங்க பசங்க நல்லா படிக்கவும் செய்வாங்க, நல்லா விளையாடவும் செய்வாங்க.

இப்பதான் அரசை நாங்க அணுகியுள்ளோம் தமிழக அரசு சார்பில் சப்போர்ட் பண்றேன்னு சொல்லி இருக்காங்க, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குறதுக்கு எங்க அகாடமி சார்பாக என்ன முயற்சி பண்ணணுமோ, அரசோட சேர்ந்து இணைந்து நாங்க பயணிக்கிறோம் என்றார்.