• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு என்று ஒட்டிய போஸ்டர்..,

ByKalamegam Viswanathan

Jun 3, 2026

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணாமலைக்கு ஆதரவாகவும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், திருப்பரங்குன்றத்தில் ஒட்டப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அண்ணாமலையின் அடுத்தகட்ட முடிவு குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.