• Mon. Apr 28th, 2025

முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்..,

ByVasanth Siddharthan

Apr 10, 2025

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. நாளை பங்குனி உத்திர விழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைக்கோயில் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

பக்தர்கள் யானை பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் தென்மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.