


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பு வேலியில் நாட்டு ரக நாய் ஒன்று சிக்கித் தவித்தது.
கால்களில் முள் கம்பி குத்தி சிக்கி இருந்ததால் நாயால் நகர முடியவில்லை.

தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் முள் கம்பி வேலியில் சிக்கியிருந்த நாட்டு ரக நாயினை மீட்க முயன்றனர். தீயணைப்பு வீரர்களை கண்டதும் நாய் பயங்கரமாக சீறியது. இதனை தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் கம்பி வேலியை வெட்டிய தீயணைப்பு வீரர்கள் நாயினை பத்திரமாக விடுவித்தனர்.


