• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் கோடை விழா நிறைவு நாளில் களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்..,

ByS.Ariyanayagam

Jun 1, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த கோடை விழா நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் கலை கட்டின.

திண்டுக்கல் கோடை விழா கடந்த மே17ம்தேதி துவங்கியது.14 நாட்களாக நடந்தது. இதில் முதல்முறையாக பலூன்கள் பறக்க விடப்பட்டு சாதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலுன்கள் பறக்க விடப்பட்டன. மேலும் படகு போட்டி, நாய் கண்காட்சி, குதிரை ஏற்றம், வாத்து பிடிக்கும் போட்டி என பல நிகழ்ச்சிகள் நடந்தன. கோடை விழா நிறைவு நாளான நேற்று, கவிஞர் குயிலன் குழுவினர் பட்டிமன்றம் நடந்தது. இதில் கவிஞர்கள் செல்வராஜ் , அரியநாயகம், ஜெரால்டின், மங்கையர்க்கரசி ஆகியோர் பேசினர்.

நிறைவு விழாவில் சுற்றுலாப் பயணிகள் இசை நாற்காலி போட்டி கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் வழங்கினார். பட்டிமன்றம் பரதநாட்டியம் இசைக்கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழும் கேடயங்களும் நிறைவு நாளில் வழங்கப்பட்டது.