• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாணிக்கம் தாகூர்..,

ByKalamegam Viswanathan

Jun 2, 2026

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி மாணிக்க தாகூரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தவுடன் 17 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது: 70 ஆண்டுகளுக்குப் பிறகு அறுபது ஆண்டுகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். 1957-இல் கக்கன் முதல் முதலமைச்சரானால் 67 காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்தது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காங்கிரஸ் பேர் இயக்கம் தமிழகத்தில் கூட்டணி மந்திர சபையில் அமர்ந்திருக்கிறது என்றால் அதற்கு ஒருவர் காரணம் என் அன்புக்குரிய நண்பர் நாம் அன்புக்குரிய தலைவர் ராகுல் காந்தியின் உயிர் நண்பர் மாணிக்கம் தாகூர் அவர்கள் இந்த பிறந்த நாளை தமிழகம் முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்பது எனது ஆசை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.