• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக சீனிவாசன் தேர்வு..,

ByS.Ariyanayagam

Jun 1, 2026

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் 31 5 26 அன்று நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தேர்தலில் இவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மாநிலச் செயலாளராக கோயம்புத்தூரை சேர்ந்த டாக்டர் கனகராஜ் அவர்களும் பொருளாளராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் பிரபு சங்கர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பர்.