


திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கோயில் பூசாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து கோயயிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வீதி உலா வந்து நேர்த்திக்கடன் புதன்கிழமை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை பாரம்பரியமான பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கம்பிளியம்பட்டி,ஆண்டியப்பட்டி,கா ட்டுப்பட்டி,செங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

