• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புதிய கட்சியை தொடங்குகிறார் விவசாய சங்கத் தலைவர்

Byமதி

Dec 17, 2021

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் பலனாய், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. பின்னர் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாபஸ் பெற்றன.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சதூனி புதிய அரசியல் கட்சி ஒன்றை நாளை சத்தீஸ்கரில் தொடங்க உள்ளார்.

அவர் துவங்க உள்ள கட்சியை பற்றிய தகவல்களை வெளியிடாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.