• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை..,

ByK Kaliraj

Aug 9, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து பாசன கண்மாய் செல்லும் வழியில் உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொட்டு விடக்கூடிய உயரத்தில் செல்கிறது.

இதனால் அச்சம் காரணமாக விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை . இதனால் பல நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.