ரிஸ்க் நாடுகள் என மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக டெல்லி, மும்பை கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் செயல்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தங்கள் பயணிகளை விமானத்தில் ஏற்றும் முன் கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் ஏறுவதற்கு மறுக்கப்பட மாட்டார்கள் எனவும் மத்திய விமானத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.