குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொல்லுவார்கள். அப்படிதான் வலியால் துடித்த கர்ப்பிணி குழந்தை ரூபத்தில் கடவுளே வந்து உதவியுள்ளது. இந்த சம்பவம் இங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இது வைரல் வீடியோ.
சாலையோரம் ஒரு ஆட்டோ பழுதடைந்து நின்று கொண்டிருக்கிறது. இதில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சென்றுக் கொண்டிர்ந்த ஆட்டோ பழுதடைந்ததால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
அந்த பெண் வலியால் அலறி துடிப்பதையும், ஆட்டோ டிரைவரும் செய்வதறியாது திகைப்பதையும் இந்த வீடியோவில் காணலாம்.
அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி ஆட்டோ டிரைவர் உதவி கேட்க முற்படுகிறார். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரத்தில் அந்த வழியாக செல்லும் ஒரு BMW கார் ஆட்டோ டிரைவரின் கையசைவுக்கு நிற்கிறது. முதலில் ஒரு சிறுமி இந்த காரிலிருந்து இறங்குகிறாள். பள்ளி உடை அணிந்திருக்கும் அந்த சிறுமி அவசர அவசரமாக காருக்குள் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குடிக்க கொடுக்கிறாள்.
அதன் பிறகு, சிறுமி காருக்கு சென்று, அதில் அமர்ந்துள்ள ஒருவரை அழைத்து வந்து, ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்திருந்த கர்ப்பிணியை அழைத்துச் சென்று காரின் பின் இருக்கையில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை வீடியோவில் காணலாம்.
மனிதநேயத்தின் உச்சமான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அந்த சிறுமியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். யார், எவர் என்று தெரியாமல் ஆபத்தில் உதவும் இந்த சிறுமி கடவுளுக்கு சமம்.