நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த நிகழ்வு குறித்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வஎளியிட்டுள்ள பதிவில் கூறுயிருப்பாதாவது…
சில நாட்களக்கு முன்பு நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை கோயில் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தடுத்த நிகழ்வு கண்டனத்துக்குறியது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மீனவப்பெண்மணி மீன் செய்துவிட்டு இரவில் மகளிருக்கான அரசுப் பேருந்தில் ஏறும்போது அப்பேருந்தின் நடத்துனர் மீன் நாற்றம் அடிப்பதாகக் கூறி பேருந்திலிருந்து அப்பெண்மணியை இறக்கிவிட்ட வரிசையில் தற்போது கன்னியாகுமரியில் நரிக்குறவர் குடும்பத்தினரையும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டதோடு அவர்களின் உடைமைகளையும் வீசி எறிந்த நடத்துனரின் வீடியோ வெளியானது.அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக அதில் தெரிவித்தார்.
இதற்கு அதிமுக சார்பில் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்கவும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் முதலவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.