


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கணினி அறிவியல் பயலும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 4.17 லட்சம் மதிப்பீட்டிலான 10 கணினிகளை இன்று (11.04.2025) கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவ மாணவியர்களிடம் வழங்கினார்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2014-2015 கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட கல்லூரியானது 5 இளங்கலை வகுப்புகளுடன் துவங்கப்பட்டு, தற்போது 10 இளங்கலை வகுப்புகள் மற்றும் 2 முதுகலை வகுப்புகளுடன் 1,680 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரில் உள்ள கணினி ஆய்வகத்தில் 20 கணினிகள் மட்டுமே உள்ளதாகவும், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு கணினி வழி கற்று கொடுப்பதற்காக கூடுதலான கணினிகள் மற்றும் நெகிழி நாற்காலி தேவைப்படுவதாக வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல். கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை அளித்தனர்.
மாணவ, மாணவியர்களின் நலன் கருதி இக்கோரிக்கையினை ஏற்று, உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, எல்காட் நிறுவனத்திடமிருந்து 10 கணினி கொள்முதல் செய்வதற்கு ஒப்படைப்பு பொருள் விளக்கப் பட்டியல் (Proforma Invoice) பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 10 கணிணிகள் ரூ.4,73,145 மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு இன்று வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் இளங்கலை, முதுகலை கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவியரிடம் வழங்கப்பட்டது.
மேலும் புதிதாக இக்கணினியில் விண்டோஸ் நியூ வெர்ஷன் (Windows new version) உள்ளீடு செய்து மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கல்வி அறிவியல் பயன்பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கணினியை முறையாக பராமரிக்க முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவியர்கள் வரும் காலத்தில் கணினி அறிவியல் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் புதிதாக வழங்கப்பட்டுள்ள இக்கணினி மூலம் கணினி அறிவியல் கல்வியை நல்ல முறையில் கற்க வேண்டும்.
புதிய பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். செயற்கை நுண்ணறிவு கணினி கல்வி (Artificial Intelligence) தொழில் நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்று அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சேகர் பேராசிரியர் ராமராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் சரவணன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

