• Fri. Apr 18th, 2025

பூலாம்பாடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழா..,

ByT.Vasanthkumar

Apr 14, 2025

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு இன்று நடைப்பெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட காளைகள் பதிவுசெய்து, அனைத்து காளைகளும் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசல் வழியாக திறந்து விடப்படுகிறது. 350-மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டு காளை அடக்க முயற்சி செய்து வருகின்றனர். இதில் பூலாம்பாடி அரும்பாவூர் கடம்பூர் கள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.