• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு..!

ByS.Ariyanayagam

Jun 4, 2026

திண்டுக்கல்லில் தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளம் சாரைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் தீயணைப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல், சின்ன அய்யங்குளம் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென தெருவுக்குள் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அப்பகுதியை சேர்ந்த சாமுவேல் மற்றும் மாரிமுத்து பாம்பை உயிருடன் பிடித்து சாக்குப்பையில் போட்டனர்

மேலும் அங்கு வந்த தீயணைப்புத்துறையினரிடம் 7 அடி நீளம் பாம்பு இருந்த சாக்கு பையன் ஒப்படைத்தனர்.