• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் புதிய கலெக்டராக துர்கா மூர்த்தி பொறுப்பேற்பு..,

ByS.Ariyanayagam

Jun 4, 2026

திண்டுக்கல் கலெக்டராக துர்காமூர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், தமிழக அரசு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். முந்தைய ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.