• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மழலைகளை, மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்..,

ByP.Thangapandi

Jun 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சுமார் 178 மாணவ மாணவியர் மழலைகள் இப்பள்ளியில் சேர்ந்துள்ள சூழலில், இன்று பள்ளி திறக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மழலைகளை பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், மாவட்ட கல்வி அலுவலர் ரகுபதி, வட்டார கல்வி அலுவலர்கள் வடிவேல், தேவி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு உள்ளிட்டோர் இனிப்பு வழங்கியும், பள்ளி உபகரணங்களையும் வழங்கி வாழ்த்தி வரவேற்றனர்.