மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
ஒற்றை தேசமாக உருவாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காளவாசல் பகுதியில் துவங்கி பழங்காநத்தம் பகுதியில் வரையில் செஞ்சட்டை பேரணி நடைபெற உள்ளது, தொடர்ந்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டமைப்பு சார்பில் உள்ள அரசியல் மற்றும் அமைப்புகள் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
செஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது.
மதுரையில் நடைபெற்ற உள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி மற்றும் செஞ்சட்டைபேரணியில் கலந்து குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பின் கொளத்தூர் மணி,சு,வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்சந்திப்பில் கூறியதாவது.
பாஜக அரசின் ஆட்சி மோசமான செயல்பாட்டில் உச்சத்தை நோக்கி செல்கிறது. எளிய மக்களுக்கான செயல்பாடுகளை பெரியாரிய கூட்டமைப்பு செயல்படுகிறது. அண்ணாமலை பாஜக தலைவர் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதாக பிம்பத்தை உருவாக்கி வருகிறது.பிரதமர் பங்கேற்ற மேடையில் தமிழக முதல்வர் பல்வேறு கோரிக்கைகளையும், நடைமுறை படுத்தாத தீர்மானங்கள்முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதர்ற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகதான் பார்க்க முடிகிறது.தமிழை மதிப்பதில்லை என்பதை தான் நிதின்கட்கரி எழுந்து நிற்ககாகதை காண்பிக்கிறது.