• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிப்பு..,

ByS.Ariyanayagam

Jun 3, 2026

திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் கம்பெனியின் கழிவு பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவிலிருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் வழியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியினரால் எரிக்கப்படும் கழிவுகளால் வெளிவரும் நச்சு புகை மற்றும் துர்நாற்றத்தால்

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் மூச்சுத்திணறல், இருமல், குமட்டல், கண், உடல் எரிச்சல் ஏற்படுவதால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

தொடர்ந்து தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் இருந்து வரும் கழிவுகளை திண்டுக்கல் – வத்தலகுண்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே அப்பகுதியில் தோள் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் இப்பகுதி வாழ்வதற்கே தகுதி இல்லாத சூழ்நிலையாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.