மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 2018ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபத்திலிருந்த அரிய சிற்பங்கள் தீயால் கடுமையாக சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள புது மண்டபத்திலும் அரிய சிற்பங்கள் கல் தூண்கள் உள்ளதால் அங்குள்ள கடைகளை மாநகராட்சியின் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து கடந்த ஆண்டு குன்னத்தூர் சத்திர கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், புது மண்டபத்தில் இருந்த 300 கடைகளை இடமாற்றம் செய்வதாகவும், ஏல முறையில் சுமார் 268 க்கும் மேற்பட்ட கடைகள் சத்திரத்திற்கு சென்றனர்.
இந்த நிலையில் 33 கடைகள் பொது மண்டபத்தை விட்டு இடம் மாற்றம் செய்யாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி துவங்கவுள்ளது வசந்த உற்சவம் நிகழ்ச்சி. இதற்காக புது மண்டபத்தை சுற்றி கடைகள் உள்ள பகுதியில் தண்ணீர் நிரப்ப படிக்கட்டுகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் புது மண்டபத்தில் உள்ள கடைகளை காவல்துறையினரின் உதவியுடன் கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்
