• Thu. Dec 12th, 2024

திருவாரூரில் சொத்துக்காக பெண் மீது வெந்நீரை ஊற்றிய கொடூரம்..!

Byவிஷா

Jan 29, 2022

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சொத்து தகராறில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து பெண் மீது ஊற்றிய கொடூரம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வேம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி (வயது 30). அவரது கணவரின் அண்ணன் மனைவி பத்மாவதி ( வயது 32) சொத்து தகராறு காரணமாக கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றியதில் பலத்த காயமடைந்த அருள்செல்வி குடவாசல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அருள்செல்வி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பத்மாவதி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை குடவாசல் காவல்துறையினரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.