• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பட்டாசு வெடித்ததில் சாலையோரம் குப்பை பற்றி எரிந்த சம்பவம்..,

ByP.Thangapandi

Jun 3, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க, நகர் மன்ற கூட்டத்தின் தீர்மானம் மூலம், நகராட்சி நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை முறையாக நகராட்சி நிர்வாகம் அமல் படுத்தாத சூழலில், இல்ல விழாக்களுக்கு ஊர்வலமாக செல்லும் போது பட்டாசு வெடிப்பதும், அதனால் விபத்துகள் ஏற்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இதே போல் இன்றும் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இல்ல விழாவிற்கு பட்டாசு வெடித்தவாறு ஊர்வலமாக சென்ற போது சாலையோரம் இருந்த குப்பையில் தீ பொறி பட்டு தீ பற்றி எரிந்தது.

ஆள் உயரத்திற்கு தீ பற்றி எரிந்த நிலையில் அருகே இருந்த மின்சார டிரான்ஸ்போர்மர்-க்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை, இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரம் பட்டாசு வெடித்ததில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.