


தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பொன்முடி தனது பேச்சில் இந்து போன்ற உணர்வை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தி பேசியதையும், தமிழ்நாடு பிராமண சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை உடனடியாக கட்சிப் பதவியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், அவர் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு பிராமண சங்கம் மாநிலத் தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது போன்று ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் திமுகவினர் தொடர்ந்து பேசி வருவதை, திமுக தலைவர் உடனடியாக நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்க அனைத்து பிராமணர்கள் சார்பாகவும் மற்றும் இந்து அமைப்புகள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம் என தமிழ்நாடு பிராமண சங்க மாநிலத் தலைவர் திருவெற்றியூர் நாராயணன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.


