• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட 10 இடங்களில் இயங்கி வந்த விற்பனை நிலையங்களை தற்போது தவெக அரசால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அதிரடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வேஷ்டி, சேலைகள், போர்வைகள், துண்டு, பட்டு சேலைகள் , லுங்கி ,சட்டைகள், பட்டு வேஷ்டிகள் குழந்தைகளுக்கான ஆடைகள் என பல வண்ண டிசைன்களை உற்பத்தி செய்யப்பட்டு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாக விழா காலங்களில் அதற்கு சிறப்பு தள்ளுபடி செய்து விற்பனையை அதிகமாக்கி மக்களிடத்தில் இந்த கைத்தறி , கதர் ஆடையை கொண்டு போய் சேர்க்க இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும்.

1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு
சென்னையில் மட்டும் 13 இடங்களில் விற்பனை நிலையம் உள்ளன அதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை நிலையம் இருக்கிறது தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, பீகார் ,சத்தீஸ்கர், டெல்லி, கோவா, குஜராத் ,கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களும் என மொத்தம் 135
கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது

இங்கு விற்பனை செய்யும் சேலைகள் வேஷ்டிகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் முடிவு செய்யப்பட்டு கட்டி காப்பாற்ற பட்டு வருகின்றது .தமிழ்நாட்டில் 2021 நிலவரபடி 1,134 கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். நாடு முழுவதும் 2.44 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர் இவர்கள் ஒரு ஆண்டுக்கு ரூபாய் 850 கோடி மதிப்பில் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்கிறார்கள் .இந்த கைத்தறி ஆடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1200 கோடிக்கு
கோஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென்று 10 கோஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை குறைவு என காரணம் காட்டி ஆகஸ்ட் 31-க்குள் மூடுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உத்தரவுஇட்டுள்ளது இது கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு தொடங்கப்பட்ட ஒரே நிறுவனம் கோஆப்டெக்ஸ் ஒரே நேரத்தில் 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு பதில் விற்பனை குறைவான இடங்களில் விற்பனை அதிகரிக்க புதிய யுக்தியை கடைப்பிடித்து அந்த நிறுவனம் தொடர வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் இந்த அரசு எடுத்தேன், கவித்தேன் என்று உத்தரவு போடுகிறது . எதிர்ப்பு வந்தால் திரும்ப பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை இந்த அரசு வாபஸ் வாங்குற அரசாக இருக்குமோ என்னமோ தெரியவில்லை.

11 மதுபானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என அந்த மதுபானங்களை டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யக்கூடாது என்று தடை செய்யப்படுகிறது .ஆனால் 15 மணி நேரத்தில் உணவு கட்டுப்பாட்டு வாரியத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என தடை செய்யப்பட்ட அந்த மதுபானங்களை திரும்ப விற்பனை செய்யப்படலாம் என்று உத்தரவு வருகிறது .

ஆனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கிற இந்த கோஆப் டெக்ஸ் மூடுவதன் மூலம் நெசவாளர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது இதில் லாபம், நஷ்டம் பார்க்கக் கடாது

கதர் கைத்தறி ஆடைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது அதன் மூலம் கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரத்தை காக்க செய்த ஒரு சேவை துறையாக தான் இதுவரை பார்க்கப்பட்டு வந்தது.

தவெகஅரசு பார்வையை இப்போது லாப நோக்குடன் செயல்படுகிறது
அதனால் தான் 51ஆயிரம் கோடியாக இருந்த மதுபான விற்பனையை
இந்த நிதியாண்டில் 56,000 கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்து தவெக அரசுமக்களுக்கு நல்ல மாற்றத்தை தந்திருக்கிறது என்பதைதான் இதை பார்க்க முடிகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் இவர்கள் அறிவிப்பை கொடுப்பதும் ஆழம் பார்ப்பது, எதிர்ப்பு கிளம்பியதற்கு பிறகு வாபஸ் வாங்குவது என்பதுதான் இந்த அரசின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.
என கூறினார்.