• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி நோன்பு..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மாங்கல்ய பலம், செல்வ விருத்தி, ஐஸ்வர்யம் அருளும் வரலட்சுமி பூஜை நேற்று தமிழ்நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத நாளாகும். செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டிச் செய்யப்படும் விரதம் இது.

நேற்று (ஆகஸ்ட் 21) வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பெண்கள் விரதம் இருந்து வீடுகளில் பூஜைகள் செய்தனர். தீர்த்தம் நிரப்பிய கும்பத்தை, வர மகாலட்சுமியாக அலங்கரித்து மாலைகள், ஆபரணங்கள் அணிவித்து பூஜைகள் செய்தனர்.

பால், பழங்கள், அவல் சர்க்கரை பொங்கல், இனிப்பு பண்டங்கள் நெய்வேத்தியம் படைத்து, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். நோன்பு சரடை கையில் கட்டி அம்பிகைக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தோடு சேலை, ஜாக்கெட், வளையல், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தாலி உள்ளிட்ட மங்கல பொருட்களை பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதமாக கொடுத்தனர்.

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், வீட்டில் செல்வ சுபிட்சம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர்.