


கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,

ஜெய்லர் பார்ட் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
அஜித் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி உள்ளது. அது குறித்து கேட்டபோது, வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ என தெரிவித்து கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.

