• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போலி பத்திரிகையாளர்களுக்கு திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை..,

ByS.Ariyanayagam

Aug 22, 2026

மிரட்டி பணம் பறிக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை எஸ்.பி.ஜெயக்குமார் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால்,அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.