• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,

ByKalamegam Viswanathan

Aug 21, 2026

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.
கழக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன், கழக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் வி.பி.பி. பரமசிவம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு கழக மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி பேசுகையில்,

அதிமுக பிறக்கும்போது வெற்றியை பரிசாக கொடுத்த மாவட்டம் திண்டுக்கல் மாவட்டமாகும் . அதிமுகவில் இருந்தால் சாமி அதிமுகவில் விட்டு சென்றால் சாணி. அதிமுக தொண்டர்கள் வாழ்ந்தாலும், செத்தாலும் அதிமுக தான் என்று உள்ளார்கள் அதிமுக என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அதிமுகவை தூர்ந்து போன சக்தி என்று அவதூறு பரப்புகிறார்கள்.
இதன் மூலம் அதிமுகவை முடக்கி விடலாம் நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது .இது 50 ஆண்டு கால கட்சி யாராலும் வீழ்த்த முடியாது .

கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை செய்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டம் ,2000 அம்மா மினி கிளினிக், குடி மராமத்து திட்டம் இது போன்ற திட்டங்களை செய்தார்.

இன்றைக்கு காவிரி பிரச்சனையால்
21 லட்சம் ஏக்கர் காய்ந்து கிடக்கிறது. அஞ்சரை கோடி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையாக இருக்கிறது. மேகதாவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வாய் திறக்கவில்லை இது தமிழகத்தின் சாபக்கேடாகும். சட்டமன்றத்தில் மக்கள் குறைகளைப் பற்றி பேசாமல் விஜயை புகழ் பாடும் பாட்டுமன்றமாக உள்ளது.

எடப்பாடியார் கொண்டு வந்த நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை ஜனாதிபதி தனது உரையில் பேசினார். அதேபோல காவிரி குண்டாறு திட்டத்தை எடப்பாடியார் எடுக்க கொண்டு வந்தார் இது போன்ற திட்டங்களை மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேச மறுக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது .

விவசாயிகளின் பிரச்சனை மீது தீர்வு காண முதலமைச்சருக்கு மனம் வரவில்லை, ஆனால் சட்டமன்ற உறுப்பினருக்கு கார் வழங்க முதலமைச்சர் உத்தரவிடுகிறார் .இன்றைக்கு காரா? சோறா? என்றால் எடப்பாடியார் சோறு தான் முக்கியம் என்று விவசாயிகளுக்கு குறைகளை போக்குவார். .அதனால்தான் கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் பயிர் கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிக்காக மாபெரும் போராட்டத்தை எடப்பாடியார் நடத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் கார் வழங்கப்படுகிறது என்றால் இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது .அதை சரி செய்ய அமைச்சர்களுக்கு கொடுக்கும் கார்கள், உதவியாளர்களை வழங்க உத்தரவிட்டுஅவர்களுக்கு வாய்பூட்டு போட்டு விடலாம் என்று 75 ஆயிரம் ரூபாய் டீசல் உள்ளிட்ட செலவிற்கும் மற்றும் 25,000 உதவியாளருக்கு சம்பளம் என்று ஒரு லட்ச ரூபாய் இதில் வழங்கப்பட உள்ளது.

ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் முன்பு விஜய் சொன்னார். அதைத்தான் விவசாயிகள் கேட்கிறார்கள். விவசாயிகள் விஜய்யிடம் பிச்சை கேட்கவில்லை உரிமையை தான் கேட்கிறார்கள். அதை கூட வழங்க விஜய்க்கு மனமில்லை. விவசாயிகளை வாழ வைக்க மனம் இல்லாதவர் எப்படி நாட்டு மக்களை வாழவைக்க மனம் வைப்பார்.

புரட்சித்தலைவி அம்மா பசிபட்டினி நாட்டிற்கு இருக்கக்கூடாது என்று மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசியை 2011 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். தற்போது அமைச்சர்கள் சட்டமன்றத்தில் இது குறித்து அரிசி சரியில்லை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் எடப்பாடியார் சட்டமன்றத்தில் புத்தி கூர்மையுடன் பேசினார். பொது விநியோக திட்டத்தின் கீழ் நல்ல அரிசியை போட வேண்டும் என்றால் அரிசி கொள்முதல் செய்யும் பொழுது மாடல் ரைஸ் மில்லுக்கு அனுப்பி இரண்டு முறை அவித்து அதை சரி செய்தால் அரிசி தரமாக இருக்கும் இதற்காக கூடுதலாக 2,500 கோடி தேவைப்படும் என்று கூறினார். இப்படி சட்டமன்றத்தில் ஆட்ட நாயகனாக எடப்பாடியார் உள்ளார்.

விஜய்க்கு குறுவை சிறப்பு தொகுப்பு, வறட்சி நிவாரணம் என்பது கூட தெரியாது ,வறட்சி நிவாரணம் கொடுங்கள் என்றால் அதற்குத்தானே குறுவை சிறப்பு தொகுப்பு கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார். இதே அம்மாவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் வறட்சி ஏற்பட்டபோது, சென்னை நீங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்கள் சென்று வறட்சிநிவாரணம் கணக்கெடுத்து அதன் மூலம் 1247 கோடி ரூபாய் அம்மா அவர்கள் வழங்கினார்கள் .

சட்டமன்றத்தில் மூன்று கோப்புகள் என்னிடம் உள்ளது என்னைத் தட்டி எழுப்பி விடாதீர்கள் என்று கூறினார் விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே அப்படி என்றால் திமுகவிற்கு இவருக்கும் அண்டர்டீலிங் உள்ளதா ?

தொகுதி வரைமுறையில் தற்பொழுது ஒரு குழப்பத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளார். ஆனால் எடப்பாடியார் தெளிவாக சட்டமன்றத்தில் தொகுதி அளவு குறைய கூடாது, அதேபோல மகளிர்க்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்‌

சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் சர்க்கார் படம் போஸ்டரை கிழித்ததால் நீங்கள் எதிர் வரிசையில் உள்ளீர்கள் நாங்கள் ஆட்சியில் உள்ளோம் என்று கூறுகிறார். சர்க்கார் படத்தால் வறுமை ஒழிந்ததா? வேலை வாய்ப்பு கிடைத்ததா ?இதே சர்க்கார் படத்தில் அம்மாவின் திட்டங்களை தூக்கி எறிந்து படக்காட்சி இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம் என்று அறிவித்துள்ளீர்கள்.

சுதந்திர தின விழாவில் விஜயின் தந்தை தாயார் பக்கத்தில் விஜய்யின் அன்புக்குரியவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அத்தனை பேரும் சல்யூட் அடித்தார்கள் ஒருவேளை அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப் போகிறார்களா ?அதேபோல டெல்லி சிறப்பு பிரதிநிதியாக விஜய் படத்தை எடுத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது, ஏன் தமிழர் ஒருவர் கூட இல்லையா? அதே போல விஜய் படத்தை தயாரித்த கல்பாத்தி அர்ச்சனாவிற்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது.இப்படி விஜய் படத்தை தயாரித்தவர்களுக்கு அரசு பதவி வழங்கப்பட்டது .

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் எந்த போராட்ட களத்திற்கு சென்று உள்ளாரா ?காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ,கச்ச தீவு இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாரா?சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்கு ரொட்டித் துண்டாவது கொடுத்துள்ளாரா ?

ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் 22,000 கோடி கடனை வாங்கி விட்டார், இன்னும் இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடியை கடனை வாங்கி விடுவார். இப்படியே சென்றால் இந்த ஐந்து ஆணடுகளில் 20லட்சம் கோடி கடனை வாங்கி விடுவார் .

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் எந்த சாதனை செய்யவில்லை? 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று கூறுகிறார். ஆனால் டாஸ்மார்க் வருமானம் 51 ஆயிரம் கோடியில் இருந்து தற்போது 55000 கோடியாக இலக்கை நிர்ணயித்து உள்ளார்கள். அது மட்டுமல்ல ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்கத் தொடங்கி விட்டார்கள் .குறிப்பாக 11 வகை மதுபானங்களை உணவு ஆணையத்தால் தடை செய்யப்பட்டது தடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் விற்க ஆணையை பிறபித்துள்ளனர் .

ஜென்சி தலைமையை மூளை சலவை செய்து ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்.மூளை சலவை செய்வதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்வை தோற்கடித்துள்ளார். ஜென்சி தலைமுறை போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவு போடுகிறார். எதிர்ப்பு வந்தவுடன் ரத்து செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் தனியார் வசம் என்று உத்தரவு போடுகிறார், எதிர்ப்பு வந்தவுடன் பிறகு வாபஸ் பெறுகிறார். இப்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, எதிர்ப்பு வந்தவுடன் வாபஸ் பெறகிறார் இந்த மூன்று மாத ஆட்சி என்பது தடுமாற்ற ஆட்சியாக தான் உள்ளது.

இன்றைக்கு 107 தொகுதியில் வெற்றி பெற்றுள்ள விஜய் பெற்ற வாக்குகள் 35 சதவீதம்தான். விஜய் வேண்டாம் என்று 65 சகவீதம் மக்கள் விஜய்க்கு எதிராக வாக்களித்து உள்ளார்கள் இவர்களை எல்லாம் நாம் கண்டறிய வேண்டும் .மீண்டும் எடப்பாடியாரை ஆட்சியில் அமர்த்த நாம் பாடுபட வேண்டும். இன்றைக்கு திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது இனிமேல் தமிழகத்தில் போணி ஆகாது.

பொது வாழ்க்கையில் ஈடுபட நினைக்கும் ஜென்சி தலைமுறை அம்மா பேரவைக்கு வரவேண்டும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்றைக்கு விஜய்க்கு முதல்வர் பதவி என்பது நிரந்தரம் அல்ல.தஞ்சாவூரில் ஒரு இளைஞர் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீக்குளித்து இறந்து போனார் நிச்சயம் அவரது எண்ணம் நாள் நனவாகும். அதிமுகவை ஏன் தொட்டோம் என்று விஜய் நினைக்கும் காலம் நிச்சயம் வரும்.

தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை குறிப்பாக மகளிருக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். இந்த தேர்தல் அறிக்கையை கடன் வாங்காமல் செயல்படுத்த முடியுமா என்பதை விஜய்க்கு நான் சவால் விடுகிறேன் ?

வீட்டு தோட்டத்தில் கீரையும் வளக்கலாம் ,குரோட்டன் செடியும் வளர்க்கலாம் குரோட்டன் செடி அழகாக இருக்கும் ஆனால் பலன் தராது. கீரை பார்க்க சுமாராகத்தான் இருக்கும் ஆனால் உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும் .குரோட்டன் செடி என்பது விஜய் ஆகும், கீரை என்பது எடப்பாடியார் ஆகும். ஆகவே தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும்
ஜென்சி தலைமுறை அனைவரும் எடப்பாடியார் முதலமைச்சராக்க பாடுபட வேண்டும் இவ்வாறு கழக மாநில அம்மா பேரவை செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.என். வேணுகோபால், தேன்மொழி சேகர், மாவட்ட பொருளாளர் மோகன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகரன், வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் சுதாகர், அன்ன களஞ்சியம், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் சிவக்குமார், பெருமாள், தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்தையா, அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, வடமதுரை ஒன்றிய கழக செயலாளர்கள் தண்டாயுதம் லட்சுமணன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் சேம்பர் ஆரோக்கியா சாமி, தொப்பம்பட்டி ஒன்றிய கழக செயலாளர்கள் முருகேசன், இளங்கோவன், நிலக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், சாணார்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமராசு, வேடசந்தூர் பேரூர் கழக செயலாளர் பாபு சேட், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், சேசு, இக்பால், மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜசேகர், மாவட்ட கழக இணை செயலாளர் திராவிடராணி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் பிரபு ராம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா முகமது, சுகன், போக்குவரத்து கழக முன்னாள் மண்டல செயலாளர் நாராயணசாமி, ஆத்தூர் ஒன்றிய பேரவை செயலாளர் சந்தானகிருஷ்ணன், முகமது யூசுப் அன்சாரி, சித்திக், முகமது அப்துல்லா, கொடைக்கானல் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.பி.ஆர்.பிரபு நன்றி கூறினார்.